பொய் சொல்கிறாரா விக்னேஷ் சிவன்? சர்ச்சையில் வெடித்த என்ஜாய் எஞ்சாமி பாடல்..

Santhosh Narayanan Vignesh Shivan
5 நாட்கள் முன்
Edward

Edward

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடி நடமாடிய என் ஜாமி எஞ்சாமி என்ற பாடல் கடந்த ஆண்டு வெளியானது. பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானதை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் இப்பாடலை தீ பாடி இருக்கிறார்.

ஆனால் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அறிவு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இப்படி அறிவு வெளியிட்ட பதிவு சர்ச்சையானதனை அடுத்து சந்தோஷ் நாராயணனும், அவர் மகள் தீ-யும் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவை தொடர்பு கொண்டு அழைத்தோம், ஆனால் அமெரிக்காவில் அவர் இருந்ததால் அவரால் கலந்து கொள்ளமுடியாமல் போனது. அவரது திறமையை நாங்கள் மதிப்பதாகவும் கூறியிருந்தனர்.

பின் இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தெருக்குரல் அறிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் அப்போது அமெரிகாவில் இருந்து இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் அமெரிகாவுக்கு போக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் அவரால் தவிர்க்க முடியாத சூழலாக் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் திறமைசாலி நாங்கள் யாரையும் மாற்றிப்பாட வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதில் யார் பொய் கூறுகிறார்கள் என்று பலர் குழம்பி வருகிறார்கள்.

Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.