அஜித் படத்தை இழந்தும் திருந்தாத விக்னேஷ் சிவன்!! நயன் தாரா போட்ட பெரிய பிளான்

Nayanthara Vignesh Shivan Gossip Today Jawan
By Edward Jun 26, 2023 11:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஆண்டு 2022 ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தான் நடித்து வரும் ஜவான் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வந்தார்.

இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த நயன் தாரா கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். பல படங்களில் நடித்து வரும் நயன், கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம், லிப் பாம் தொழிலையும் நடத்தி வருகிறார்.

பிரபல டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளார் என்றும் கூறப்பட்டது. தற்போது புது ஒரு தொழிலை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவில், மிகப்பெரிய அடுக்குமாடி கொண்ட வீட்டினை கட்டவுள்ளாராம்.

160க்கும் மேற்பட்ட பிளாட்கள் உள்ள கட்டிடத்தை கட்டவுள்ளார்களாம். அதற்கான வேலையில் விக்னேஷ் சிவன் பார்த்து வருகிறாராம். இருக்கும் பணத்தை வைத்து அதை செய்து வளர வளர இனிமேல் சம்பாதிக்கும் பணத்தை வைத்து அந்த வீட்டை கட்ட பிளான் போட்டுள்ளார்களாம்.

அதற்காக பல படங்களில் நடிக்கவும் முடிவெடுத்துள்ளாராம் நயன் தாரா. அந்த லிஸ்ட்டில் அறம் 2வும் இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர்கள் அந்தணன் கூறியிருக்கிறார்.