நயன்தாரா தான் முக்கியம்? ஆசையாய் வளர்த்த சொந்த பெரியம்மாவையே வெறுத்து ஒதுக்கிய விக்னேஷ் சிவன்!

Nayanthara Vignesh Shivan
By Edward Jun 10, 2022 09:30 AM GMT
Report

நேற்று பிரம்மாண்ட மகாபலிபுரத்தில் நடைபெற்றது நடிகை நயன் தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம். 7 ஆண்டுகளாக காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்த இருவரின் திருமணத்திற்கும் முக்கியமாக நட்சத்திரங்கள் உறவினர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர்.

அதில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனை சிறுவயதில் இருந்தே வளர்த்து ஆளாக்கிய பெரியம்மாவுக்கே அழைப்பு விடுக்கவில்லையாம்.

எப்படியாவது எங்களை கூப்பிடுவாங்க என்று நினைத்தேன். அதன்பிறகாவது எங்களை பார்க்க வருவாங்கள் என்று எதிர்ப்பார்த்து இருக்கிறே என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் விக்னேஷ் சிவனின் பெரியம்மா.எதுக்காக எங்களை மதிக்கவில்லை ஏன் வெறுத்து ஒதுக்குகிறான் என்று தெரியவில்லை என புலம்பியுள்ளார்.