மகள்கள் முன்பே அனிருத்தை வைத்து அப்படி பேசிய இயக்குனர்!! மேடையில் கண்கலங்கிய ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்காக பலர் பல எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் பேசிய நிலையில் ரத்தமாரே என்ற பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் மேடையில் பேசியிருக்கிறார்.
அவர் பேசியதில், தலைவர் முன்னாடி நிற்கிறேன், அப்பா, மகன் பத்திய பாட்டை எழுதியிருக்கிறேன். நானும் ஒரு அப்பா இரு குழந்தைகளுக்கு என்றும் நான் ஒரு பாட்டை எழுதியிருக்கிறேன் அது தலைவருக்காக என்று கூறுவேன்.
ரஜினிகாந்தை பார்த்து, நான் உங்களிடம் ஒன்னு சொல்லனும், உங்கள் மீது அனிரூத் மிகப்பெரிய காதல் வைத்திருக்கிறார்.
உங்களுக்கு ரெண்டு மகள்கள் இருக்கிறார்கள், செளந்தர்யா, ஐஸ்வர்யா. உங்களுக்கு ஒரு மகன் இருந்திருந்தால், அனிருத்தை பார்த்து பொறாமை பட்டு இருப்பார் என்று விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.
அப்படியொரு காதல் உங்கள் மீது வைத்திருக்கிறார் என்று கூறியது அனிருத் மற்றும் ரஜினிகாந்த் எமோஷ்னலாகி கண் கலங்கிவிட்டனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.