ஹனிமூனுன்னு சொல்லிட்டு விக்னேஷ் சிவன் செய்த வேலை.. அஜித்தால் ஏமாற்றத்தில் நயன்தாரா..

Nayanthara Vignesh Shivan
By Edward Aug 16, 2022 07:18 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். கடந்த ஜூன் 9 ஆம் தேதி இருவரும் மகாபலிபுரம் ரெசார்ட்டில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து ஹனிமூன் சென்ற காதல் ஜோடிகள் ஒரு வார கொண்டாட்டத்திற்கு பிறகு, தங்கள் பணிகளை தொடர்ந்தனர். விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் பணியிலும், நயன்தாரா ஜவான் படப்பிடிப்பிலும் பிஸியாகினர்.

தற்போது செஸ் ஒலிம்பியாட் வேலைகள் முடிந்த நிலையில் மனைவி நயன் தாராவை கூட்டிக்கொண்டு ஸ்பெயின் நாட்டிற்கு பறந்துள்ளார் விக்னேஷ் சிவன். பார்சிலோனா உள்ளிட்ட பல சுற்றுலாத்தளங்களுக்கு சென்று ரொமாண்டிக் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

ஹனிமூனுன்னு சொல்லிட்டு விக்னேஷ் சிவன் செய்த வேலை.. அஜித்தால் ஏமாற்றத்தில் நயன்தாரா.. | Vignesh Why Went To Barcelona With Nayanthara

இந்நிலையில் நயன் - விக்னேஷ் சென்றிருக்கும் அவுட்டிங் இரண்டாம் ஹனிமூன் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதைவிட ஒரு முக்கிய காரணத்திற்காக தான் விக்னேஷ் சிவன் நயனை ஸ்பெயினுக்கு கூட்டிச்சென்றுள்ளாராம்.

அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் எடுக்கவிருக்கும் ஏகே62 படத்தின் கதை எழுதவுள்ள நிலையில் அப்படத்தின் லொகேஷன் பார்க்கவும் அஜித்திற்காக அதிநவீன பைக் ஒன்றினை தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

இப்படத்தில் ஏகப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளை விக்னேஷ் அமைக்கவுள்ளதால் நிறைய லொகேஷன் ஸ்பாட்களையும் பார்த்து வருகிறார்களாம். அஜித் படத்தை எப்படியாவது ஹிட்டாக்க நயன் தாரா உதவியுடன் ஹனிமூன் என்ற பெயரில் இப்படியொரு பிளான் போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.