ஹீரோ நான் தான்.. ஆனா கதை எனக்கு எழுதுனது இல்லை.. தளபதி 67 பரிதாபங்கள்
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகவும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
தளபதி 66 படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 வது படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்திற்குப்பின் இந்த கூட்டணி மீண்டும் அமைகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஹீரோவாக இருந்தாலும், இந்த கதை முதல் முதலில் ரஜினிக்காக எழுதப்பட்டது தானாம்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருந்த படத்திற்காக எழுதப்பட்ட கதையில் தற்போது விஜய் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதனால், விஜய்க்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களை மட்டும் லோகேஷ் செய்து வருவதாக தெரிவிக்கின்றனர். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.