இயக்குனரை கட்டாயபடுத்தி கதையை மாற்ற சொல்லும் விஜய்.. சர்ச்சையில் தந்தையும் மகனும்

Vijay S. A. Chandrasekhar
By Kathick Aug 23, 2022 07:10 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் மீதும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சி மீதும் இருந்த பெரும் சர்ச்சைகளில் ஒன்று, இயக்குனரிடம் கதையை கேட்டுவிட்டு தனக்கு பிடித்தது போல் கதையை மாற்ற சொல்வார்கள் என்பது தான்.

இதுகுறித்து இயக்குனர் மிஷ்கின் கூட ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் ' நான் ஒரு கதை கூறினால், நீங்களும் உங்க அப்பாவும் பல திருத்தங்களை சொல்லுவீங்க அதான் உங்க கூட படம் பண்ணல ' என்று கூறியிருந்தார்.

இயக்குனரை கட்டாயபடுத்தி கதையை மாற்ற சொல்லும் விஜய்.. சர்ச்சையில் தந்தையும் மகனும் | Vijay And His Father Changing Directors Story

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள விஜய், " கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை மாற்ற நான் சொல்ல மாட்டேன். அதை சொல்லவும் எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு எனக்கு Knowledge கிடையாது. ஒரு சில படங்கள் பண்ணும்போது மட்டும் தான், என்னுடைய ரசிகர்களுக்காக ஒரு குத்து பாடல் வேண்டும் என்று கேட்பேன். ஒரு மாஸ் சண்டை காட்சி வேண்டும் என்று கேட்பேன், அவ்வளவுதான். எனக்கு கதையை இப்படி திருப்பி போடு. இந்த சீனை இப்படி மாற்று என்று சொல்ல தெரியாது " என்று கூறியுள்ளார்.