விஜய்யை கலாய்த்த லொள்ளு சபா!! விஜய் டிவியை மிரட்டிய எஸ் ஏ சந்திரசேகர்..

Vijay Star Vijay Gossip Today S. A. Chandrasekhar
By Edward Feb 17, 2025 11:30 AM GMT
Report

விஜய் - எஸ் ஏ சந்திரசேகர்

நடிகர் விஜய் தன்னுடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தற்போது டாப் இடத்தினை பிடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து விஜய்யின் அனைத்து விஷயங்களையும் எஸ் ஏ சந்திரசேகர் தான் பார்த்து வந்தார். இதற்கிடையில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் வேறுவழியில் சென்று அரசியலில் நுழைந்திருக்கிறார்.

விஜய்யை கலாய்த்த லொள்ளு சபா!! விஜய் டிவியை மிரட்டிய எஸ் ஏ சந்திரசேகர்.. | Vijay And Sac Threatened Lollu Sabha Team

இந்நிலையில் விஜய் - சந்திரசேகர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது லொள்ளு சபா. அதில் நடித்த நடிகர் சுவாமிநாதன் அளித்த பேட்டியொன்றில், ஒருசில விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

லொள்ளு சபா சுவாமிநாதன்

அதில், விஜய் நடித்த போக்கிரி படத்தினை பேக்கிரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலாய்த்து ஒரு எபிசோட் செய்தோம். விஜய் அப்பா எஸ் ஏ சி, விஜய் டிவியை வீட்டிற்கு வரவழைத்து மிரட்டினார்கள்.

விஜய்யை கலாய்த்த லொள்ளு சபா!! விஜய் டிவியை மிரட்டிய எஸ் ஏ சந்திரசேகர்.. | Vijay And Sac Threatened Lollu Sabha Team

இயக்குநர் ராம்பாலா, என்னுடைய உதவி இயக்குநர்கள் வித்தியாசமாக பண்ரோம் என்று கூறி இப்படி பண்ணிவிட்டார்கள், நான் பண்ணவில்லை என்று கூறிவிட்டார்.

அதன்பின், விஜய்யை கூப்பிட்டு ஸ்டார் தமிழ் என்று பெயரை வைக்க முடிவு எடுத்திருந்தோம், தளபதி விஜய் பெயரே இருக்கட்டும் என்று ஸ்டார் விஜய் என்று வைத்து விட்டோம் என்று விஜய் தொலைக்காட்சி கூறியதாக சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.