விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டியா? கேள்விக்கு சூரி கொடுத்த பதில்..

Sivakarthikeyan Vijay Soori JanaNayagan Parasakthi
By Edward Dec 16, 2025 12:30 PM GMT
Report

சூரி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமாகி தற்போது மாஸ் ஹீரோவாக மாறி நடித்து வருபவர் தான் நடிகர் சூரி. தற்போது நடிப்பை தாண்டி ஹோட்டல் பிசினஸிலும் ஈடுபடுத்தி வரும் சூரி, அம்மன் உணவகத்தின் 12வது கிளையை மதுரை மாட்டுத்தாவணியில் திறந்துள்ளார்.

விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டியா? கேள்விக்கு சூரி கொடுத்த பதில்.. | Vijay And Sivakarthikeyan Actor Soori Given Answer

இதனை திறந்து வைத்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, மதுரையில் 12வது அம்மன் உணவகத்தின் கிளையை மாட்டுத்தாவணியில் திறந்து வைத்திருக்கிறேன். முழுக்க முழுக்க என் குடும்பத்தின் ஆதரவின் காரணமாக உணவகத்தை நடத்தி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அப்போது, ஜனநாயகன் - பராசக்தி படம் ஒரே நேரத்தில் ரிலீஸாகவுள்ளது. விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டியா? என்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் கேட்டுள்ளார்.

விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டியா? கேள்விக்கு சூரி கொடுத்த பதில்.. | Vijay And Sivakarthikeyan Actor Soori Given Answer

விஜய் - சிவகார்த்திகேயன்

அதற்கு சூரி, யாருக்கும் யாரும் போட்டிக்கிடையாது. தங்கள் வேலையை திறம்பட செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும். விஜய் அண்ணன், சிவகார்த்திகேயன் தம்பி, எல்லோருக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. விஜய் அண்ணன் உசத்தில் இருக்கிறார். தம்பி சிவகார்த்திகேயன் வளர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மண்டாடி படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது. நான் என் முழு உழைப்பை அதில் போட்டுள்ளேன். மீனவர்கள் குறித்து பேசும் இதுபோன்ற கதையை யாரும் பார்த்திருக்க மாட்டர்கள், விரைவில் வெளியாகும். அதேபோல் இயக்குநர் ராம் உடன் ஒரு படம் தயாராகி கொண்டிருக்கிறது.