லீக் வீடியோவால் இதுவரை இல்லாத அளவிற்கு கோபத்தில் நெருப்பை காட்டிய நடிகர் விஜய்.. வாய்ப்பிளந்த இயக்குனர்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
எஸ் தமன் இசையில் வரும் தீபாவளி அன்று முதல் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வாரிசு படத்தின் சில லீக் புகைப்படங்கள் வீடியோக்கள் படக்குழுவை தாண்டி லீக்காகி வந்தநிலையில் சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பின் போது இப்படியான லீக் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியளித்தது.
இதனை கேள்விப்பட்ட விஜய், கோபமடைந்திருக்கிறாராம். அந்த வீடியோவை பார்க்கும் போது மேலிருந்து யாரோ எடுத்திருக்கலாம் என்று அது லைட்மேன்களின் வேலையாக இருக்கும் என்று தெரிந்துள்ளது.
இதனால் மொத்த லைட்மேன்களையும் உடனடியாக அழைத்த விஜய், உயிரை பணையம் வைத்து வேலை செய்து வருகிறார்கள்.
இதனால் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கடுமையாக வார்த்தையால் நெருப்பை கக்கி இருக்கிறாராம். இப்படி விஜய் கோபத்தில் யாரும் பார்த்ததில்லை என்று இயக்குனர் வம்சியே ஷாக்காகிவிட்டாராம்.