செருப்பு போடாம இருக்க காரணமே இதுதான் பாஸ்... ஓபனாக கூறிய விஜய் ஆண்டனி

Vijay Antony
By Yathrika Jun 03, 2024 08:00 AM GMT
Report

விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக, இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது மூத்த மகள் தற்கொலை செய்து இறந்த பிறகு தனது சினிமா பயணத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

தொடர்ந்து படங்கள் நடிப்பது, இசையமைப்பது, இசைக் கச்சேரிகள் நடத்துவது என பிஸியாக உள்ளார். 

அண்மையில் ஒரு பேட்டியில் நான் திடீரென செருப்பு இல்லாமல் நடப்பது ஏன் என்று பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், செருப்பு போடாமல் இருப்பது மனதிற்கு அமைதி தருகிறது, அது உடல்நலத்திற்கும் நல்லது, நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறேன், இது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என செருப்பு போடாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். 

செருப்பு போடாம இருக்க காரணமே இதுதான் பாஸ்... ஓபனாக கூறிய விஜய் ஆண்டனி | Vijay Antony About Not Wearing Chappals