இதுவரை யாரும் பார்க்காத விஜய்.. விஜயகாந்த் உடலை உருகிஉருகி பார்த்து அழுத தளபதி....
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக திகழ்ந்து வரும் விஜய், இப்படியொரு இடத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த் தான். செந்தூரப் பாண்டியன் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார்.
அப்படி எல்லாம் பேசிய விஜய், விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருந்து கஷ்டப்பட்டு வந்துள்ளார். ஆனால் விஜய், நன்றியில்லாமல் விஜயகாந்தை நேரில் சந்தித்து பார்க்கக்கூட இல்லை.
இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், டிசம்பர் 28 ஆம் தேதி காலை உடல்நலக்குறைவால் அவரது 71வது வயதில் மரணடைந்த செய்தி வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இறுதி சடங்கில் பங்கேற்க விஜய் வருவாரா வர மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. தற்பொழுது அதெற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் இறுதி சடங்கில் பங்கேற்க வந்திருக்கிறார். ஆனால் இதுவரை யாரும் இப்படியொரு விஜய்யை பார்த்திருக்க முடியாது. கண்ணீர் மல்க அவர் விஜயகாந்தின் உடலை பார்க்கும் அந்த பார்வை பார்ப்பவர்களை உருக வைத்திருக்கிறது.