ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் பிரச்சனை இருக்கட்டும்!! விஜய்க்கு ரெண்டு விஷயம் நல்லதுதானாம்...
ஜனநாயகன் சென்சார்
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் நாளை ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவிருந்த நிலையில், இன்னும் சென்சார் சான்றிதழ் பிரச்சனை முடியாததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படத்தை தள்ளி வைப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்த நிலையில், ஜனநாயகன் ரிலீஸாகாவிட்டாலும் விஜய்க்கு நல்ல விஷயம் நடக்கவும் இருக்கிறதாம்.

அதாவது என்னதான் சிக்கல் ஏற்பட்டாலும், இதனால் படத்துக்கும் விஜய்க்கும் பெரிய பாதிப்பு ஏற்படாது, ஏனென்றால், இந்த பஞ்சாயத்து விஜய்க்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இரு வகைகளில் பாசிட்டிவாக அமைந்துள்ளது.
பாசிட்டிவ் ஒன்
அதாவது சென்சார் சான்றிதழ் இழுத்தடிக்கப்பட்டிருப்பதால், திமுக தான் திரைப்படத்தை வெளியிடாமல், விஜய்யை பழிவாங்குகிறது என்ற எண்ணம் அவரது ரசிகர்கள் மத்தியில் உருவாகும்.
பொங்கல் ரேஸில் 2 படங்கள் தான் இருக்கிறது. ஒன்று ஜனநாயகன் மற்றொன்று பராசக்தி, பராசக்தியை ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது. இதனால் பராசக்திக்குத்தான் லாபம். திட்டமிட்டு திரைமறைவில் பாஜகவுடன் பேரம் பேசி எங்கண்ணன் படத்தை நிப்பாட்டிட்டாங்க என்று விஜய் விசிறிகள் திமுகவுக்கு எதிராக எதிர்ப்பை கொந்தளித்து வருகிறார்கள்.

பாசிட்டிவ் டூ
அதேபோல், இரண்டாவது பாசிட்டிவ் என்னவென்றால், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தணிக்கை வாரியம், எங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்கல, அப்படின்னா, நாங்கள் பாஜகவின் பி-டீம் என்று சொல்பது பொய்தானே, தவெக ஸ்ட்ராங்காக பேச இந்த சம்பவம் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.