தளபதி விஜய்யின் பிறந்தநாள் பரிசு! கோடியில் கொட்டிக்கொடுக்கும் தந்தையின் வீடியோ..

vijay nelson beast sachandrasekar thalapathivijay
By Edward Jun 24, 2021 03:34 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தினை அடுத்து இயக்குநர் நெல்சனுடன் கூட்டணி வைத்து படப்பிடிப்பினை சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்தார். படத்தின் பெயர் என்ன என்ற தகவல் தளபதி பிறந்தநாளன்று வெளியாகும் என்று கூறப்பட்டது.

அதேபோல் தளபதி விஜய்யின் 47ஆம் ஆண்டு பிறந்தநாளில் பீஸ்ட் என்ற தலைப்பில் படத்தின் பெயரை அதிகாரபூர்வமாக வெளியானது. இதையடுத்து விஜய் மற்றும் தளபதி 65 படத்தின் பீஸ்ட் டைட்டில் இணையத்தை டிரெண்டிங் ஆக்கி அதிரவைத்தது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ் எ சந்திரசேகர் அவர்கள் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு மாவட்டத்திற்கு வீதம் 10 ஆயிரம் வீடுகளுக்கு குறைந்தது பத்தாயிரம் சிசிடிவி கேமரா கொடுக்க நினைப்பதாகவும்.

சிசிடிவி ஒரு கண் மாதிரி எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் எந்த தவறையும் கண்டுபிடித்து விடலாம். இதனால் நான்கு மாவட்டங்களில் இது போன்ற சிசிடிவி கேமராக்களை விஜய்யின் பிறந்தநாள் பரிசாக கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு பரிசை இப்படி ஒரு பிறந்தநாள் பரிசை கொடுக்கிறேன் என்பதை விட எனக்கு வேறு சந்தோசம் கிடையாது என்று அந்த வீடியோவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.