பேட்டியில் சொர்ணமால்யா விரித்த வலையில் சிக்காத தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ..

Vijay Viral Video Gossip Today Swarnamalya
By Edward Mar 05, 2025 08:30 AM GMT
Report

விஜய் பேட்டி

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.

இதனையடுத்து விஜய் பற்றிய பழைய வீடியோக்கள் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வரும் நிலையில் நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சொர்ணமால்யா, விஜய்யை பேட்டியெடுத்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பேட்டியில் சொர்ணமால்யா விரித்த வலையில் சிக்காத தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. | Vijay Brilliantly Attacks Swarnamalya During Inter

திருமலை படத்தின் ரிலீஸிற்கு முன் விஜய் கொடுத்த அந்த பேட்டியில், படத்தில் லோக்கல் ஸ்லாங்கில் பேசியதுபோல் பேசிக்காட்ட சொல்லியிருக்கிறார் சொர்ணமால்யா.

அதற்கு விஜய் இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், டிவியில் ஒரு பேட்டியிலேயே படத்தோட கதை, வசனம் எல்லாம் கேட்டுட்டா எப்படி? ஒழுங்கா தியேட்டருக்கு வந்து படத்தை பாரு என அட்டகாசமாக அந்த லோக்கல் ஸ்லாங்கில் பேசி பதிலை கொடுத்து சிரிக்க வைத்திருக்கிறார்.