தவெக விஜய்யின் BMW முதல் பஸ் வரை!! வாகனத்தில் 0277 எண்ணின் ரகசியம் இதான்..
தவெக விஜய்
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த சில வருடங்களிலேயே தமிழக வெற்றிக் கழகம் என்ற தன்னுடைய அரசியல் கட்சி மூலம் சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார் விஜய். பெரும்பான்மை பெறாததால் எப்போது தவெக எப்படி நெருக்கடிகளை தாண்டி ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அரசியலில் விஜய் இந்த புதிய பயணத்தை தொடங்கியுள்ள வேளையில், அவரின் ஆடம்பர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் ரசிகர்களிடையே தனித்துவமான கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் விலை உயர்ந்த, ஆடம்பர கார்களின் செல்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
தன்னுடைய கேரேஜில் ஸ்விஃப்ட் முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை கார்களை அடுக்கி வைத்திருக்கிறார் விஜய். அதில் ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றப்பின் விஜய் 3 புதிய கார்களை வாங்கினார்.

இதில் ஒரு BMW எலக்ட்ரிக் கார், ஒரு லெக்ஸஸ் எல் எம், ஒரு டொயோட்டா வெல்ஃபயர் ஆகிய கார்கள் அடக்கம். அரசியலில் தீவிரமாக இறங்கிய விஜய், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு சிறப்புப் பேருந்தையும் வாங்கினார். விஜய்யின் இந்த அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஒரே எண் தான் இருக்கிறது.
0277 ரகசியம்
அது 0277 என்பதுதான். BMW எலக்ட்ரிக் காரின் எண் TN 14 AH 0277 என்றும் லெக்ஸஸ் எல் எம் காரின் எண் TN 14 AL 0277 என்றும் டொயோட்டா வெல்ஃபயர் காரின் எண்TN 14 AM 0277 என்றும் இருக்கிறது. அதுவே தவெக பிரச்சார பேருந்தின் எண் TN 14 AS 0277-ஆகவும் இருக்கிறது.

இது விஜய்யின் ஆடம்பர வாகனங்கள் மீதான ஆர்வத்தை மட்டுமில்லாமல் உணர்ச்சிப்பூர்வமான உறவின் அடையாளமாக இருக்கிறது. இந்த 0277 எண்ணிற்கு பின் விஜய்க்கு ஒரு எமோஷ்னல் தொடர்பு இருக்கிறதாம்.
இந்த எண் உண்மையில் 12-02-77 என்பதாகும் அதாவது பிப்ரவரி 14, 1977 தேதியை குறிக்கிறது. இந்த தேதி, மிக இளம் வயதில் காலமான விஜய்யின் தங்கை வித்யா சாந்திரசேகரின் பிறந்தநாள் தானாம். மறைந்த சகோதரியின் நினைவை எப்போதும் தன்னுடன் வைத்திருக்க, விஜய், தான் ஓட்டும் ஒவ்வொரு காரிலும் இந்த தேதியை ஒரு எமோஷனல் குறியீடாக பயன்படுத்தி வருகிறாராம்.