விஜய்யுடன் சண்டை! தனிப்பட்ட விஷயத்தில் சண்டையா என கேட்ட பிரபலம்! விளக்கமளித்த நடிகர் நெப்போலியன்

vijay asin napoleon pokkiri
By Kanagasooriyam Apr 05, 2021 06:05 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து தன் படங்களால் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார். மாஸ் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆரம்பத்தில் போக்கிரி படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து ஒரு பிராண்ட்டை உருவாக்கியது. அப்படத்தின் போது சில சலசலப்பிலும் நடிகர் விஜய் சிக்கினார்.

அப்படத்தின் போது நடிகர் நெப்போலியனுக்கு விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதிலிருந்து இருவரும் எந்த சகவாசமும் வைத்ததில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி நடிகர் நெப்போலியன், ‘கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுரதை நிறுத்திவிட்டேன். அவர் படங்களை பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தார். ஆனால் விஜய்யுடன் என்ன காரணத்திற்காக கருத்து வேறுபாடு நேர்ந்தது என பல கேள்விகள் எழுந்தது.

அதற்கு காரணம், நடிகர் விஜய்யை பார்க்க நெப்போலியன் படப்பிடிப்பு தளத்திற்கு தன் உறவினர்களை கூட்டிச்சென்று பார்ப்பாராம். போகபோக கருப்பான நடிகர் விஜய் கோபத்தில் இதுபோல் இனிமேல் செய்யவேண்டாம் என்று அசிங்கப்படுத்தியுள்ளாராம். இதனால் விஜய்யுடன் நடிப்பதை நிறுத்தினேன். பிரபு தேவாவிற்காகதான் அந்த படத்தில் நடித்து முடித்து கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தி அளித்த பேட்டியில் இன்னும் அந்த சம்பவம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, அவர் கூப்பிட்டு என்னை நடிக்க சொன்னால் நான் நடிப்பேன் வேறு எந்த விஷயமும் இல்லை. அப்போது அந்த சூழ்நிலையும் விஜய்யின் அப்ரோச்சும் காரணமாக நடந்தது. அதனால் நான் ஒதுங்கி இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.