100 கோடி வாங்கிட்டு இது கூட தளபதி செய்யமாட்டாரா! வாழ வைக்கும் தெய்வம்!!
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான படம் பீஸ்ட். கலவையான விமர்சனத்தை பெற்று வந்த பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். தளபதி 66ன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையோடு ஹைதராபாத்தில் ஆரம்பமானது.
முதற்கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தளபதி விஜய் இயக்குனர் வம்சியிடன் ஒரு கோரிக்கையினை கூறியுள்ளார். ஹைதராபாத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மே மாதம் 25 நாட்களுக்கு ஷூட்டிங் நடபெற்றவுள்ளது.
ஆனால் அதை சென்னையில் எடுக்க வேண்டும் கூறியுள்ளாராம். ஏனென்றால் கொரோனா காலக்கட்டத்தில் சினிமாத்துறையில் நடிகர் நடிகைகளை தாண்டி மற்ற நலிவுற்ற தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அவர்களின் மறுவாழ்வு கொடுக்கும் வண்ணம் விஜய் ஷூட்டிங்கினை சென்னையில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம். ஆனால் படக்குழுவினர் சென்னையில் நடத்தினால் அது கதைப்படி சரிபட்டு வராது என்று குறி வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளார்களாம்.