லீக்காகும் சஞ்சய் சாஷா புகைப்படங்கள்! தளபதி பிள்ளைகள் கணக்கில் இருப்பது போலியா?

vijay thalapathy sanjay jasonsanjay divyashasha
By Edward Jun 17, 2021 10:18 AM GMT
Edward

Edward

Report

சமுகவலைத்தளத்தில் தற்போது டிரெண்டிங் புகைப்படங்களாக இருப்பது தளபதி விஜய்யின் மகன் மகள் புகைப்படங்கள் தான். சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இரவு நேரத்தில் நண்பர்களுடன் கும்மாளம் போடும் வீடியோவும் தோழியுடன் எடுத்த புகைப்படங்களும் லீக்கானது.

இதையடுத்து மகள் திவ்யா சாஷா மற்றும் சஞ்சயும் சேர்ந்து நடிகர் மொட்டை ராஜேந்திரனுடன் தெறி படத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலானது. மேலும், அந்த புகைப்படங்கள் விஜய் மகன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவின் பெயரில் இருக்கும் சமுகவலைத்தள பக்கத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

இதற்கு விஜய் தரப்பினரிடமிருந்து அதிகார தகவல் வெளியிட்டுள்ளனர். பிரபல தமிழ் சினிமா பிஆர்வோ வாக இருக்கும் கெளஷிக் அவரது டிவிட்டர் பக்கதில், தளபதி விஜய்யின் பிள்ளைகள் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவும் டிவிட்டரில் இல்லை.

மேலும், அவர்கள் பெயரில் இருக்கும் கணக்குகள் போலியானது என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் தெரியும் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery