விஜய்யால் மது குடிக்காம இருக்க முடியாதா? கண்முன் நடந்த சம்பவத்தை கூடிய பிரபல நடிகர்...
விஜய் மீது பல குற்றச்சாட்டுக்கள்
நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் மீது பல குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவது பலராலும் பேசுபொருளாகி வருகிறது. சமீபத்தில் தனி விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்டபோது நடந்த ஒரு சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது.

அதாவது விமானப் பயணத்தின்போது விஜய்யின் கைப்பையிலிருந்து கத்திரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆதன் அர்ஜுனா கைப்பயில் மதுபாட்டில் இருந்ததாகவும் கூறி விமான பணியாளர்கள் அவரை சில மணிநேரம் தடுத்துநிறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக இதற்கு மறுத்து விளக்கம் கொடுத்தார். இதன்பின் தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார், விஜய்யால் மதுகுடிக்காமல் இருக்க முடியாது. பொதுக்கூட்டங்களிலும் அவர் குடித்துவிட்டுதான் பேசுவார் என்று கூறியிருந்தார்.

விஜய்யால் மது குடிக்காம இருக்க முடியாதா
இந்நிலையில் விஜய்யுடன் சில படங்களில் நடித்த நடிகர் அனுமோகன் பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்ட விஷயம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போ எல்லாம் நான் அதிகமாக சிகரெட் பிடிப்பேன், இப்போது நான் அதை விட்டுவிட்டேன். அந்தநேரத்தில் விஜய் அந்த வழியாக வந்தார். என்னை பார்த்ததும் உடனே திரும்பிச்சென்றார்.

என்னாச்சு என்று கேட்டபோது, அண்ணே நீங்க சிகரெட் பிடிச்சிட்டு இருக்கீங்க, அந்த வாசனை எனக்கு ஒத்துக்காது என மிகவும் மரியாதையுடன் சொன்னார். அதன்பின் இது உடலுக்கும் நல்லது இல்லை, முடிந்தவரைக்கும் விட்டுருங்க என்று அறிவுரை கூறியதாக அனுமோகன் தெரிவித்துள்ளார்.
அப்படி புகையிலை வாசனை ஒத்துக்காது என்று சொல்லும் மனிதர் மீது இப்படி குற்றச்சாட்டு வருவது நியாயமா என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.