நம்மளோட சில பேர் வரலாம் இல்லையா!! கிரண் டயலாக்கை காப்பி அடித்து பேசிய விஜய்..
விஜய் பேச்சு
நடிகர் விஜய் தன்னுடைய தவெக கட்சியில் முதல் மாநாட்டினை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார். மாநாட்டில் விஜய் பேசிய பேச்சை கேட்டு பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அதிலும் நம்மளோட சிலபேர் வரலாம் இல்லையா என்று வரிசையாக இல்லையா, என்கிற டோனில் விஜய் பேசியிருக்கிறார்.
இதை எங்கயோ கேட்டிருக்கிறோமே என்று நெட்டிசன்கள் நோண்ட ஆரம்பித்து ஒரு வீடியோவை ட்ரெண்ட் செய்துள்ளனர். எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் கிரண் நடித்த படத்தில் கிரண் பேசிய வசனத்தை தான் விஜய் காப்பி அடித்து பேசியிருக்கிறார் என்று கலாய்த்துள்ளனர்.
கிரண் டயலாக்
'அவருக்குத்தான் வயசாகிடுச்சு இல்லையா.. நீங்க சின்ன வயசு இல்லையா.. புதுசா குடி வந்திருக்கேன் இல்லையா.. வலிக்கிறது இல்லையா.. மாட்டிண்டு இருக்கேன் இல்லையா' என்று கிரண் பேசியதை தற்போது விஜய்யை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
That "Illaiyaaa" modulation ?? https://t.co/5t4pDKJbqB
— Trollywood ? (@TrollywoodX) October 29, 2024