கலைஞர் வெண்கல சிலை..தவெக தலைவர் விஜய் பேச்சு!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Vijay M. K. Stalin Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Mar 05, 2026 06:30 AM GMT
Report

தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மார்ச் 4 ஆம் தேதி தஞ்சைக்கு சென்று தன்னுடைய கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது வழக்கம்போல் முதலமைச்சர் முக ஸ்டாலினையும், திமுக அரசையும் விளாசி பேசினார். அவர் பேசுகையில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு திவாலாகப்போகிறது. ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என்று சின்ன பங்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

கரூரில் தொடங்கி ஜனநாயகன் பட ரிலீஸ்வரை என் மீது பழி போட்டார்கள். ஜனநாயகன் பட ரிலீஸ் பிரச்சனையில் மு.க ஸ்டாலின் பூசி மெழுகி, பட்டும் படாமல் ஆதரவு தந்தார். அவருக்கு என் நன்றிகள். திமுக அடுத்தமுறையும் ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி நடந்ததாக வரலாறே இல்லை.

கலைஞர் வெண்கல சிலை..தவெக தலைவர் விஜய் பேச்சு!! கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Vijay Criticises Dmk And Stalin At Thanjavur Meet

ஸ்டாலின் சாரின் அப்பாவாலேயே முடியவில்லை, இவரால் முடியுமா? உங்கள் தந்தைக்கு சில வைக்க முடிவு செய்தபோது சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது தெரியுமா? மக்கள் பணத்தில் ஏன் சிலை வைக்கிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யை எடுத்து உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீர்கள் என்பதுபோல்தான். அந்த சிலை அவசியமா? என்ற கேள்வியை விஜய் முன்வைத்தார். விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

ப்ளாஷ்பேக்

அதாவது 1967 ஆட்சிக்குப்பின் 71ல் திமுக தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்தது. அந்த வரலாறே விஜய்க்கு தெரியவில்லை என்றும் அதேபோல் கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் நடிகர் விஜய், கலைஞர் நகர் என்று பெயர் வைப்பதாக சொன்னார்கள். அதுமட்டும் போதாது, அந்த இடத்தில் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும், அவருடைய 100வது வயதில் இதுபோன்ற ஒருவிழா எடுத்து அவருடன் சேர்ந்து நானும் அதை ரசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் விஜய். மேலும் விஜய் நீட் பற்றி முன்பும் தற்போதும் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் என்ன விஜய் இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.