கலாய்த்த தியேட்டர் ஓனர்! அப்படியே காலில் விழுந்த விஜய் தேவரகொண்டா

Vijay Deverakonda Liger
By Parthiban.A Aug 29, 2022 06:30 PM GMT
Report

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து இருக்கும் லைகர் படத்தினை தான் நெட்டிசன்கள் கடந்த சில தினங்களாக வறுத்தெடுத்து வருகின்றனர். படம் அதனால் மோசமான வசூல் தான் பெற்று வருகிறது.

லைகர் படத்தை புறக்கணிப்பதாக சிலர் ட்ரெண்ட் செய்தபோது அதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை, பயப்படப்போவதும் இல்லை என விஜய் தேவரகொண்டா தெரிவித்து இருக்கிறார். இந்த திமிர் பேச்சு தான் படம் தோல்விக்கு காரணம் என மும்பையை சேர்ந்த பிரபல தியேட்டர் உரிமையாளர் மனோஜ் தேசாய் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தற்போது அந்த தியேட்டர் ஓனரை நேரில் சந்தித்து அவர் காலில் விழுந்து இருக்கிறார்.

அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி இருகிறது.

 

GalleryGallery