தலையில் துண்டை போட்ட விஜய் தேவரகொண்டா! ஷூட்டிங் கூட முடியல, அடுத்த படமும் நஷ்டம்

Vijay Deverakonda
By Parthiban.A Sep 06, 2022 08:29 PM GMT
Report

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் ரிலீஸ் ஆன லைகர் படம் மோசமான விமர்சனங்கள் காரணமாக படுதோல்வி அடைந்தது.

படத்தின் ரிலீஸுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா கொடுத்த பில்டப் எல்லாம் வீணாகி லைகர் படத்திற்காக வாங்கிய சம்பளத்தையே திருப்பி கொடுத்துவிட்டார் விஜய் தேவரகொண்டா.

அடுத்து அவர் அதே இயக்குனர் உடன் கூட்டணி சேர்ந்து ஜன கன மன என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகர் தோல்வி ஆனதால் அந்த படத்தையும் தற்போது நிறுத்திவிட்டனர்.

ஜன கன மன படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி படத்தை கைவிடுவதால் மிகப்பெரிய தொகை இழப்பு ஏற்பட இருக்கிறது. அதனால் அடுத்த படமும் இப்படி ஆயிடுச்சே என விஜய் தேவரகொண்டா தலையில் துண்டை போட்டு கொண்டிருக்கிறாராம்.  

தலையில் துண்டை போட்ட விஜய் தேவரகொண்டா! ஷூட்டிங் கூட முடியல, அடுத்த படமும் நஷ்டம் | Vijay Devarakonda Next Film Shelved