கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்திருக்கிறது. அந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது, இருப்பினும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் ட்ரோல்களை சந்தித்தது.
மேலும் உலகப்புகழ் பெற்ற குத்துசண்டை வீரர் மைக் டைசனை இங்கு கொண்டு வந்து நடிக்கவைத்து இருந்தாலும், இயக்குனர் அதை சிறப்பாக செய்ய தவறிவிட்டார் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
படம் தற்போது ப்டுதோல்வி என்பதால் விஜய் தேவரகொண்டா தன் சம்பளத்தில் இருந்து 200 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தை ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் ரூ.100 கோடி தொகைக்கு விலைக்கு கேட்டதாம், அதற்கான பேச்சுவார்த்தை நடத்து வந்த நேரத்தில் ட்விட்டரில் பேசிய விஜய் தேவரகொண்டா 'தியேட்டரில் ரிலீஸ் செய்தால் 200 கோடியை விட அதிகம் வசூல் வரும்' என கூறினார்.
மேலும் சிலர் Boycott என இந்த படத்திற்கு பிரச்சனை ஏற்படுத்திய போது "அதை கண்டு பயப்படவில்லை" என திமிராக பதில் கூறினார். அப்படி இருந்தவரை தற்போது சம்பளத்தையே திருப்பி கொடுக்க வைத்திருக்கிறது இந்த தோல்வி.