தப்பு செய்த நடிகரை கோபத்தில் முகத்தில் குத்திய மைக் டைசன்.. ஷூட்டிங்கில் துடித்த விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. பல படங்களில் நடித்து அறிமுகமாகிய விஜய், அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்கள் அவரது கேரியரில் முக்கியமானதாக அமைந்திருந்தது.
இப்படங்களுக்கு பிறகு பாலிவுட் வரை இந்திய சினிமா பிரபலமாக ஒரு ரவுண்ட் வருகிறார். தற்போது லைகர் என்ற பான் இந்தியா படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணனுடன் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியா முழுவதும் சென்று பிரமோஷன் வேலைகளில் கலந்து கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே.

சமீபத்தில் தமிழ் பிரமோஷனுக்காக சென்னை வந்த இருவரும் பத்திர்க்கையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்ததை பற்றி பத்திரிக்கையாளர்கள் விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், அவருடம் நடித்த எனக்கு பெருமையாக இருக்கிறது. படப்பிடிப்பின் போது நான் சிறு தவறு செய்துவிட்டேன். அதனால் என் கன்னத்தில் குத்தி அடித்துவிட்டார். ஒரு நாள் முழுவதும் எனக்கு அது தலைவலியை ஏற்படுத்தியது.
பின் அடுத்த நாள் சரியாகிவிட்டது. அவர் நல்ல மனிதன் அவருடன் பணியாற்றியது பாக்யமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
Vijay Deverakonda about @MikeTyson
— Freddie-Liger ARR (@FreddieVijayDev) August 13, 2022
? He's scary and sweet at the same, a unique person, a memorable experience, mistake la face meedha kodthe day mottam headache unde but alane nilabadi unna kottinappudu.. #Liger #VijayDeverakonda #Miketyson#Tamil pic.twitter.com/3AGYYwmP8R