மிருணாள் தாகூரின் அந்த இடங்கள் அமைந்த விதம், ஏதோ இருக்கு!! நடிகையை வர்ணித்த விஜய் தேவரகொண்டா
பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் முதல் முறையாக ஜோடியாக நடித்திருக்கும் ஃபேமிலி ஸ்டார. இப்படம் வருகிற ஏப்ரல் 5ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசுகையில், நான் திரைப்படங்களை குறித்து நினைக்கும் முன்பில் இருந்தே மிருணாள் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இளம் வயதில் இருந்து பணியாற்றி வருகின்றார். எதையும் எளிதில் கற்றுக் கொள்வார். உங்களுக்கு அருமையான முகம் என மிருணாளிடம் அடிக்கடி கூறி வருகிறேன்.
அவர் அதிகமாக பேசாவிட்டாலும், நம்மால் எமோஷன்களை உணர முடியும்.
அவரின் மூக்கு, உதடுகள், கண்கள் அமைந்த விதம், அதில் ஏதோ இருக்கிறது. அவருக்கு மொழி தெரியாவிட்டாலும் முகத்தில் எமோஷன்கள் வருகிறது என்று விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார்.