குட் நியூஸ் சொன்ன ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா.. மூன்றாவது முறையாக கைகோர்த்த ஜோடி

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kathick Dec 06, 2024 02:32 AM GMT
Report

திரை வட்டாரத்தில் காதல் ஜோடி என கிசுகிசுக்கப்பட்டு வருபவர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா.

இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவந்தாலும் கூட, தங்களது காதல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இந்த ஜோடி வெளியிடவில்லை.

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து முதல் முறையாக கீதா கோவிந்தம் எனும் படத்தில் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து டியர் காம்ரேட் படத்தில் இரண்டாவது முறையாக இணைத்து நடித்தனர்.

குட் நியூஸ் சொன்ன ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா.. மூன்றாவது முறையாக கைகோர்த்த ஜோடி | Vijay Deverakonda To Pair Up With Rashmika Again

இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக படத்தில் ஜோடியாக இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்ககத்தில் உருவாகும் இப்படம் விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் என சொல்லப்படுகிறது.