விஜய், தனுஷை இயக்கியவருக்கு இப்படியொரு நோயா? பரிதாப நிலையில் இயக்குனர் ரமணா

Dhanush Vijay
By Edward Aug 03, 2022 08:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர்களாக விஜய், தனுஷ் படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ரமணா. நடிகர் விஜய்யை வைத்து திருமலை படத்தினை இயக்கிய விஜய்க்கு ஒரு நல்ல ஹிட்டை கொடுத்தார். அதன்பின் நடிகர் தனுஷிக்கு மாஸ் படமான சுள்ளான் படத்தினை கொடுத்தார்.

இதன்பின் மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து ஆதி படத்தினை இயக்கினார். இதைதொடர்ந்து தொண்டை புற்றுநோயால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் பேசுவதில் சிரமப்பட்டு வருகிறார்.

இது குறித்து சமீபத்தில் இயக்குனர் ரமணாவின் மனைவி பேட்டியில் கூறியது, குதிரை என்ற படத்தின் போது அவருக்கு 2010ல் குரல் க்ராக் ஆகியதால் குரலில் சிக்கல் இருபதை அறிந்தார் ரமணா. அதன்பின் 2011ல் புற்று நோய் குணமடைந்து உடல்நலம் தேரியதாகவும் தானும் தன் இரு பெண் குழந்தைகளும் தான் அவருக்கு ஆறுதலாக இருந்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் இயக்குனர் சித்ரா லட்சுமனனின் நடத்தும் யூடியூப் சேனலுக்கு ரமணா அவர்கள் பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு முன் நான் ஒரு பொருக்கியாக சுற்றி இருந்தேன்.

அதன்பின் தான் விஜய்யிடம் கதை கூற வாய்ப்பு கிடைத்தது. விஜய் பொறுமையாக கதை கேட்பவர் என்றும் போன்ற பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க...

Gallery