விஜய் ஒதுக்கிய விசயத்தை தான் மகன் சஞ்சய் எடுத்திருக்காரா!! உண்மையை வரவழைத்த சிவகார்த்திகேயன்..
நடிகர் விஜய் தற்போது டாப் நடிகராக திகழ அவரது தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தான் காரணம். தன் மகனை எப்படியாவது உயரத்தில் கொண்டுவர தன்னுடைய இயக்கத்திலேயே நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். அதன்பின் தன் உழைப்பால் இந்த இடத்தினை பிடித்தார் விஜய்.
ஆனால் தற்போது அப்பாவிடம் பேசுவதில்லை கண்டுகொள்வதில்லை என்ற புகார் இணையத்தில் கசிந்து செய்திகள் வைரலானது. அதேபோல் மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை என்றும் மகன் சஞ்சயுடன் பேசுவதில்லை என்ற தகவலும் கசிந்தது. பீஸ்ட் படத்தின் பிரமோஷன் பேட்டியில் கூட விஜய், மகனுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யட்டும் என்று கூறியிருந்தார்.
ஜேசன் சஞ்சய், நடிகராக நடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் மனைவி சங்கீதாவின் சிபாரிசின் பேரில் தான் லைக்கா வாய்ப்பு சஞ்சய்க்கு கிடைத்ததாகவும் விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் போக்கிரி படத்தின் பிரமோஷனுக்காக விஜய் மற்றும் நடிகை அசின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் விஜய்யிடம், நீங்கள் நடித்துவிட்டீர்கள். எப்போது படத்தை இயக்க போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ’விஜய், இல்லைங்க கண்டிப்பா பண்ண மாட்டேன்.
சில பேட்டியில் நானே சொன்னேன் டைரக்ஷன் செய்வேன் என்று, ஆனால் அது எனக்கு செட்டே ஆகாது, ரொம்ப டென்ஷனான வேலை. நான் எப்போதும் கூலாக இருப்பேன் அது எனக்கு செட்டாகாது’ என்று விஜய் கூறியிருக்கிறார். இதனால் தான் விஜய், தன் மகன் இயக்குனர் ஆவது பிடிக்காமல் தான் லைக்கா போடப்பட்ட பூஜைக்கு வரவில்லை என்று இணையத்தில் கருத்துக்கள் பரவி வருகிறது.