சங்கீதாவுடன் விவாகரத்து!! 40 வயது நடிகையுடன் 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான விஜய்..
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் பற்றிய தனிப்பட்ட விசயங்கள் குறித்த வதந்தி செய்திகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சங்கீதாவுடன் விவாகரத்து
அதாவது கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருந்து அவருக்கு பல விசயங்களை செய்து வருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சில காரணங்களால் மனைவி சங்கீதாவையும் விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.
வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் முதல் இன்று வரை மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார் விஜய் என்ற தகவலும் வெளியானது. இப்படி பலவிதமான கட்டுக்கதைகளை இணையத்தில் ஊடகங்கள் கூற ஆரம்பித்து ஒரு படிமேல் சென்று இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார் விஜய் என்றும் பரப்பி வருகிறார்கள்.
அரசியல் பிரவேசத்தில் விஜய்
இந்நிலையில் அரசியல் பிரவேசத்தில் விஜய் மும்முரமாக இருப்பதாலும் லியோ படத்தில் நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக இருப்பதை வைத்து பலர் பலவிதமான கட்டுக்கதைகளை கூறி வந்துள்ளனர். அதேபோல் ஒரு டீம் விஜய்யை அரசியல் பிரவேசத்திற்கு உசுப்பேத்துகிறது.
விஜய் - திரிஷா
விஜய் எம்ஜிஆர், ஆனால் ஜெ திரிஷா தான். இந்த ஜோடி திருமண மேடையில் விரைவில் சங்கமிக்கிறது என்றும் பூத் கமிட்டி வரை தயாராக இருப்பதாகவும் அரசியல் வாரிசாக பிராமண பெண்ணும் தயார், ஜோடி எப்படி என்று பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணமும் செய்யவுள்ளார் என்ற தகவலையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அந்த பத்திரிக்கையாளர். இந்த விசயம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/5042325f-ad19-4e98-9793-9f7da907de93/23-64817e593f258.webp)