தளபதி அரசியலுக்கு வந்தால் இவரை நம்பி தான் இருக்கனும்! அப்போதான் வெற்றியாம்?

politics vijay beast prasanthkishore
By Edward Mar 25, 2022 03:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். மிகுந்த வரவேற்புடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் பீஸ்ட் வரும் ஏப்ரல் 13ல் தியேட்டர்களின் வெளியாகவுள்ளது. விஜய் படம் என்றாலே ஒருசில சமுக கருத்துகள் அரசியல் பேசுவது வழக்கமாக இருக்கும்.

அப்படி இப்படத்திலும் இது இருக்குமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இந்நிலையில் விஜய் அரசியல் பிரவேசம் சமந்தமான வேலைகளில் அவரின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரும் சில வேலைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட அரசியல் கட்சி தொடங்காமலே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த தேர்தலில் நல்லவெற்றியை பெற்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவர் குறித்த விதவிதமான போஸ்டர்களை ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி 2026-ன் முதல்வர் வேட்பாளர் விஜய் என ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது. அதில் 2026-ல் முடிவெடுத்தால் விஜய் முதல்வர் என்றும், பிரஷாந்த் கிஷோர் 2026-ல் விஜய்யின் அரசியல் ஆலோசகர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Gallery