ஈரோடு வரைக்கும் வந்தீர்களே, கரூருக்கு போக மாட்டீர்களா?!! தவெக தலைவருக்கு எதிராக போஸ்டர்கள்..
Vijay
Viral Photos
Erode
Thamizhaga Vetri Kazhagam
By Edward
தவெக தலைவர் விஜய்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 80 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் தவெக தலைவர் விஜய் பல மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரங்களை நடத்தி வருகிறார்.

புதுச்சேரியை அடுத்து தற்போது ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார் விஜய். தற்போது கோவை விமானநிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருக்கிறார் விஜய்.
போஸ்டர்கள்
இந்நிலையில், ஈரோட்டில் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டர்களில், ஈரோடு வரைக்கும் வந்தீர்களே, கரூருக்கு போக மாட்டீர்களா? என்றும் இங்க இருக்க கரூரூக்கு போகல, மலேசியா ஆடியோ லான்ச்க்கு போறீங்க, வாட் ப்ரோ, இட்ஸ் வெரி ராங் ப்ரோ என்றும் எழுதப்பட்டுள்ளது.
