விஜய் அரசியல் குடுமி சங்கீதா கையில் தான்!! விஜய் தேர்தலிலேயே நிற்க முடியாதா? விளக்கம்...

Vijay Gossip Today Sangeetha Vijay Election
By Edward Mar 19, 2026 12:45 PM GMT
Report

விஜய் அரசியல்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவருக்கு ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.

கரூர் நெரிசல் விவகாரம், ஜனநாயகன் ரிலீஸ் விவகாரம், சங்கீதா விவாகரத்து விவகாரம், திரிஷா திருமண நிகழ்ச்சி விவகாரம் வரை தற்போது வரை சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஜய்.

விஜய் அரசியல் குடுமி சங்கீதா கையில் தான்!! விஜய் தேர்தலிலேயே நிற்க முடியாதா? விளக்கம்... | Vijay Faces Legal Political Challenges Election26

இதற்கிடையில், தன் கணவர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் எவ்வளவோ கண்டித்தும் தனியாக நடிகையுடன் வெளியில் செல்வது புகைப்படம் போடுவதுமாக இருந்து வருகிறார் என்றும் புகாரளித்து விவாகரத்து மனுதாக்கல் செய்தார் சங்கீதா. இவ்வழக்கு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், அது தேர்தல் நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தேர்தலிலேயே நிற்க முடியாதா?

அதாவது சங்கீதா விவாகரத்து கோரிய மனுவை விசாரிக்க ஏப்ரல் 20 ஆம் தேதி நீதிபதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டதுதான். சொல்லப்போனால் விஜய் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல்கூட ஏற்படலாம் என்கின்றனர்.

ஏனென்றால், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களுடன், வாழ்க்கைத்துணையின் சொத்து விவரங்களையும் கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும். அந்தவகையில், விவாகரத்து நடைமுறையில் இருந்தாலும் சட்டரீதியாக மனைவியாகவே கருதப்படும் சங்கீதாவின் சொத்து விவரங்களையும் விஜய் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விஜய் அரசியல் குடுமி சங்கீதா கையில் தான்!! விஜய் தேர்தலிலேயே நிற்க முடியாதா? விளக்கம்... | Vijay Faces Legal Political Challenges Election26

இதில் ஏதேனும் முரன்பாடு ஏற்பட்டால், வேட்புமனு ஏற்கப்படுவதில் சிக்கல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழ்நிலையிலேயே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே பல தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விஜய் தானும் பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு போன்ற முக்கிய தொகுதிகளில் களத்தில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்தும் வகையில் திமுக தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளது. அப்படி விஜய் பல சவால்கலை ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருவதால் எப்படி அதையெல்லாம் சமாளிக்கிறார் என்பதே அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.