இதெல்லாம் நமக்கு தேவையா தளபதி.. ரஜினியிடம் மண்ணைக்கவ்விய விஜய்
விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் லியோ படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க என விஜய் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா, வாங்க பார்க்கலாம். ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 635 கோடி வரை வசூல் செய்திருந்தது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த படம் என அழைக்கப்பட்டு வருகிறது.
லியோ படம் உலகளவில் பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது என தயாரிப்பாளர் லலித் அறிவித்தாலும் கூட இதவுரை லியோ படத்தின் மொத்த வசூல் என்னவென்று குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி லியோ படம் இதுவரை ரூ. 597 கோடிக்கும் மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளது.
இதிலிருந்து இன்னும் சில நாட்களில் திரையரங்கில் ஓடினாலும் கூட ரூ. 600 கோடி வரை மட்டுமே லியோ படத்தின் மொத்த வசூல் இருக்கும் என்கின்றனர்.
ரூ. 35 கோடி வித்தியாசம் இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் சாதனையை லியோ முறியடிக்க கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதன்மூலம் ரஜினிகாந்த் தான் நம்பர் 1 வசூல் மன்னன் என மீண்டும் நிரூபித்துள்ளார்.