ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கி கீழே விழுந்த விஜய்.. கார் விபத்து.. அடுத்தடுத்து நடந்த ஷாக்கிங் சம்பவங்கள்

Vijay JanaNayagan
By Kathick Dec 29, 2025 03:30 AM GMT
Report

கடந்த வாரம் சனிகிழமை அன்று மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் விஜய்.

ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கி கீழே விழுந்த விஜய்.. கார் விபத்து.. அடுத்தடுத்து நடந்த ஷாக்கிங் சம்பவங்கள் | Vijay Falls Down Due To Fans Mob Chennai Airport

இந்நிலையில் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திரும்பிய விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது.

விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார் விஜய். அவர் காரில் ஏற சென்ற போது தவறி கீழே விழுந்தார். இதை தொடர்ந்து அவர் சென்ற கார் சிறிய விபத்தில் சிக்கியது. இந்த சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.