கேப்டன் நினைவிடத்தை விஜய் ரசிகர் செய்த செயல்!! கண்டபடி திட்டிய விஜயகாந்த் ரசிகை..

Vijay Vijayakanth DMDK Thamizhaga Vetri Kazhagam
By Edward Dec 31, 2024 03:45 PM GMT
Report

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் திகழ்ந்து கடந்த 2023ல் மரணமடைந்தார் கேப்டன் விஜயகாந்த். அவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

கடந்த 28 ஆம் தேதியோடு கேப்டன் மறைந்து ஒரு வருடமாகிய நிலையில் அவருக்கு குருபூஜையும் நடத்தப்பட்டது. கேப்டன் தொண்டர்கள் குவிந்த நிலையில் போலிசார் அதற்கு அனுமதி வழங்காததற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

கேப்டன் நினைவிடத்தை விஜய் ரசிகர் செய்த செயல்!! கண்டபடி திட்டிய விஜயகாந்த் ரசிகை.. | Vijay Fans Going Bad Vijayakanth Memorial Program

விஜய் ரசிகர் செய்த செயல்

இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் கேப்டன் மற்றும் விஜய் உருவத்தை வரைந்து கேப்டன் நினைவிடத்தில் காட்டியிருக்கிறார். இதனை பார்த்த தேமுதிக தொண்டர்கள் விஜய் புகைப்படத்தை காட்டாதே என்று கூறி கண்டித்தனர்.

மேலும் ஒருசில பெண்கள் விஜய் ரசிகரை கண்டபடி திட்டியும் வந்தனர். ஏற்கனவே விஜய், கேப்டன் நினைவிடத்திற்கு வரவில்லை என்று தொண்டர்கள் கோபத்துடன் இருக்க ரசிகர்கள் இப்படி செய்ததை பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.