ப்ளூ சட்டையை கழுவி ஊற்றும் விஜய் ரசிகாஸ்! இந்த வீடியோ தான் காரணம்

Vijay
By Parthiban.A Aug 07, 2022 02:45 PM GMT
Parthiban.A

Parthiban.A

Report

சினிமா விமர்சகர் மற்றும் இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் தான் சமீப காலமாக இணையத்தில் பல பரபரப்பான விஷயங்களுக்கும் காரணமாக இருந்து வருகிறார். அவர் நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் படம் பற்றி சர்ச்சை ஏற்படுத்த, பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டையின் பொம்மையை எரித்து போராட்டம் செய்தனர்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க நேற்று கமல்ஹாசன் பேசிய ஒரு வீடியோ நடிகர் அஜித்தை மறைமுகமாக அசிங்கப்படுத்துவது போல இருப்பதாக ப்ளூ சட்டை வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று ப்ளூ சட்டை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கமல் பழைய பேட்டி ஒன்றில் விஜய் இதுவரை நல்ல படங்களே நடிக்கவில்லை என சொல்வது போல அந்த வீடியோ இருக்கிறது.

ஆனால் உண்மையில் அந்த பேட்டியில் கமல் பேசும்போது 'முள்ளும் மலரும் போன்ற படங்களில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்' என்று தான் கூறி இருந்தார்.

அந்த வீடியோவை எடிட் செய்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு இருப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.