நல்ல வேளை ஹைதராபாத் ஜெயிக்கல, இல்லன்னா... ரஜினிதான் காரணம்னு கம்பு சுத்திருப்பாங்க!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..
ஐபிஎல் வெற்றிகரமாக 17 வருடம் மிகச்சிறப்பாக இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் 5 முறை சி எஸ் கே அணியும், 5 முறை மும்பை அணியும் அதிகபட்சமாக கோப்பையை வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் சன் ரைஸர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளும் மோதியது.
இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த சன் ரைஸர் படு மோசமாக 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. அதை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி குறைந்த ஓவர்களிலேயே இந்த இலக்கை எட்டி இந்த வருடம் IPL கோப்பையை தட்டி சென்றுள்ளது.
அதோடு 3 வது முறை கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கம் போல் சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா ரியாக்ஸன் வைத்து ரசிகர்கள் என்னா போச்சா என்று கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க, ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், சன்ரைசர்ஸ் அணியை சரியான போட்டியாளர்களை தேர்வு செய்தால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். அப்படி ரஜினி சொன்ன நேரம் இந்த ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகச்சிறப்பாக விளையாடியது.
எங்கே ஹைதராபாத் அணி வெற்றி பெற்று 2024 ஐபிஎல் கோப்பையை தட்டி சென்றிருந்தால், ரஜினி சொன்னதால் தான் ஜெயித்தார்கள் என்று ரசிகர்கள் கம்பு சுத்திக்கொண்டு கொண்டாடுவார்கள் என்று விஜய் ரசிகர்கள், ரஜினிகாந்த் ரசிகர்களை கலாய்த்து வருகிறார்கள்.
மென்டலன்ஸ் !!! இப்ப SRH ஜெய்ச்சா ரஜினி பேரு லா எழுதலாம் ??? pic.twitter.com/JTVaDfHO0H
— Java ? (@java__tw) May 26, 2024
ரஜினி in next audio launch:
— குழந்தை அருண் New (@aruntwitzzz) May 26, 2024
பைனல்ல ஜெயிக்குற மாதிரி டீம் எடுத்து குடுங்க மாறன்.. pic.twitter.com/65WRLojE10