விஜய்யை கலாய்த்த ஜப்பான் படம்.. வெச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்
ஜப்பான் படம் நேற்று வெளிவந்தது. ராஜு முருகன் இயக்கத்தில் Dream Warrior Pictures தயாரிப்பில் கார்த்தி நடித்த இப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இப்படத்தில் ஒரு பாடலில் 'இந்த பாடலை பாடியது உங்கள் கோல்டன் ஸ்டார் ஜப்பான்' என குறிப்பிடுவார்கள். இது விஜய் தனது குரலில் பாடும்போது அந்த பாடலில் இடம்பெறும்.
அதை கலாய்த்து தான் இப்படி ஜப்பான் படத்தில் வைத்துள்ளனர் என ரசிகர்கள் கூறி வருகிறார். அதே போல் படத்தில் இடம்பெறும் சில காட்சிகளும் விஜய்யை கலாய்க்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பிகில் மற்றும் கைதி படம் ஒரே நாளில் வெளிவந்தபோது Dream Warrior Pictures தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு விஜய் படத்தை கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதை தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் உருவான ஜப்பான் படத்தில் தற்போது விஜய்யை கலாய்க்கும்படி காட்சிகள் உள்ளனர்.
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவையும், படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் ஜப்பான் படத்தையும் கலாய்த்து வருகிறார்கள்.
You May Like This Video