விஜய் கொடுத்த தோல்வியால் வீட்டை இழந்து கடனாளியான குடும்பம்! தூக்கி நிறுத்திய விஜயகாந்த்..
தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரால் அறிமுகம் செய்யப்பட்டவர் விஜய். தன் மகனை எப்படியாவது சினிமாத்துறையில் ஒரு நல்ல உயரத்திற்கு கொண்டு செல்ல பல படங்களை எடுத்து கொடுத்து இந்த உச்சத்தை எட்ட காரணமாக அமைந்தார்.
அப்படி வசூல் மன்னனாக திகழ்ந்து வரும் தளபதி விஜய் பல கோடி ரசிகர்களை கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறார். வசூலிலும் விமர்சன ரீதியிலும் விஜய் படங்கள் மிகப்பெரிய மார்க்கெட்டை பெற்று வருகிறது.
அதிலும் தமிழ் தவிர்த்து கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். சமீபத்திய படங்களால் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வரும் விஜய்யை நம்பி பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகைகள் என அவர் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் விஜய்யின் படங்கள் ஆரம்பகாலத்தில் மோசமான தோல்விகளை கொடுத்தது. தன் அப்பா எஸ் ஏ சி-யே பல படங்கள் இயக்கி தோல்விகளை கொடுத்தார். இதனால் பல வீடுகளை விற்றும் கூட படங்களை எடுத்து கடனாளியாகினார்.
அப்போது தான் அந்த கஷ்டத்தை போக்க உருவாகிய படம் செந்தூரப்பாண்டி. இப்படத்தில் விஜயகாந்துடன் விஜய் நடித்து நல்ல வரவேற்புபெற்றும் வசூலிலும் நல்ல தொகையை கொடுத்தது.
இப்படத்திற்காக விஜயகாந்த் விஜய் குடும்பத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்திருந்தாராம். இப்படி பலருக்கு விஜயகாந்த் நல்மனதோடு பல உதவிகளை செய்து வந்தவர் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல உடல்நிலை மோசமாகியது பலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.