அந்த விஷயத்திற்கு அடம்பிடித்த விஜய்!! எதற்கு தெரியுமா.. எஸ்ஏசி ஓபன் டாக்
விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து புகழின் உச்சத்தில் இருக்கிறார்.
விஜய்யின் அப்பா எஸ்ஏசி பிரபல இயக்குனர் என்பதால் விஜய் சினிமாவில் எளிதாக நுழைந்தாலும் அவர் ஆரம்ப கட்டத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்திருக்கிறார்.
ஆனால் அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாமல் கடின உழைப்பால் உயர்ந்துள்ளார். தற்போது, விஜய் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கப்பட்டு முதல்கட்ட சூட்டிங் சில தினங்களுக்கு முன் முடிக்கப்பட்டு. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எஸ்ஏசி ஓபன்
இந்நிலையில், விஜய்யின் தந்தையான எஸ்ஏசி தளபதியின் கல்லூரி காலத்து ஆசை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், "விஜய் அவரது கல்லூரி காலத்தில் இருந்தே மார்க்கெட்டில் எந்த விதமான புது கார் வந்தாலும் அதனை உடனே வாங்கி விட வேண்டும் என்று அடம்பிடிப்பார். அதன் காரணமாகவே நான் மார்க்கெட்டில் வரும் கார்களை வாங்கி விடுவேன்" என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.