விஜய் இவ்வளவு மோசமானவரா!! நடிகை ஜோதிகாவை கொச்சையாக வர்ணித்ததை கூறிய பிரபல நடிகர்..
நடிகர் விஜய் டாப் நடிகராக்வும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து தற்போது 68வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் பற்றி பலர் அவரது கேரக்டர் எப்படி என்று கூறுவதுண்டு.
அப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எப்படி இருப்பார், மரியாதை தருவார் என்றெல்லாம் பல பிரபலங்கள் கூறக்கேட்டிருப்போம். ஆனால் விஜய் சக நடிகைகளை வர்ணித்தபடி பேசிய விசயத்தை நடிகர் ஷாம் சமீபத்தில் கூறியிருக்கிறார்.
12B படத்தில் கதாநாயகனாக நடித்த போது ஜோதிகா, சிம்ரன் என இரு நடிககள் அப்படத்தில் நடித்திருந்தனர்.
இதனை கண்ட விஜய், நடிகர் ஷாம் இடம், டேய் என்னடா அறிமுகமாகும் படத்திலேயே இரண்டு குதிரைகளுடன் நடிக்கிறாய் என டபுள் மீனிங்கில் கலாய்த்துள்ளார்.
தற்போது திரிஷா - மன்சூர் அலிகான் விசயம் வைரலானதை அடுத்து விஜய் இப்படி பேசிய சம்பவம் உள்ளிட்ட, பல நடிகர்கள், நடிகைகளை கிண்டல் செய்த சம்பவங்களை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.