அஜித்துக்கு விலை உயர்ந்த பொருளை பரிசு கொடுத்த விஜய்.. பிறந்தநாளில் வைரலாகும் வீடியோ

Ajith Kumar Vijay
By Karthick Raja May 01, 2024 02:30 PM GMT
Report

நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

அஜித்துக்கு விலை உயர்ந்த பொருளை பரிசு கொடுத்த விஜய்.. பிறந்தநாளில் வைரலாகும் வீடியோ | Vijay Gift To Ajith Kumar Viral Video

அதே போல் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து, அஜித்தின் சில ஸ்பெஷலான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி விஜய்யின் ரசிகர் ஒருவர் அஜித்திற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை, விஜய் ரசிகர்களின் சார்பில் தெரிவித்துக்கொண்டு, விஜய் மற்றும் அஜித்தின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அஜித்துக்கு விலை உயர்ந்த பொருளை பரிசு கொடுத்த விஜய்.. பிறந்தநாளில் வைரலாகும் வீடியோ | Vijay Gift To Ajith Kumar Viral Video

இதில் மங்காத்தா மற்றும் வேலாயுதம் படங்களின் படப்பிடிப்பில் அஜித் - விஜய் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, அஜித்திற்கு கை கடிகாரம் ஒன்றை விஜய் பரிசாக கொடுத்தார். அந்த ஸ்பெஷல் வீடியோவை தான் தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வைரலாக்கி வருகிறார்கள். 

இதோ அந்த வீடியோ :