ஓடாத படத்துக்கு பார்ட்டி வேற கேக்குதா? நெல்சன் கேட்ட விருந்தை கொடுத்த விஜய்..
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13 ஆம்தேதி தியேட்டர்களின் வெளியான படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரித்து மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லாமல் படுமோசமான விமர்சனத்தை மக்கள் மத்தியில் இருந்து பெற்றது.
பீஸ்ட் படத்தின் விமர்சனத்தால் கேஜிஎஃப் 2 படத்திற்கு தியேட்டர்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று வரையில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது.
படத்தின் படுமோசமான கதை அம்சத்தை பலர் நெல்சன், விஜய்யையும் விமர்சித்தும் கிண்டல் செய்தும் வந்தனர். தற்போது படக்குழுவினருக்கு நடிகர் விஜய் சாப்பாட்டு விருந்து கொடுத்துள்ளார்.
படத்தின் தூணாக இருந்த விஜய்க்கு நன்றி தெரிவித்து இயக்குனர் நெல்சன் புகைப்படத்தோடு ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். இதனை பலர் ஓடாத படத்துக்கு பார்ட்டி கேக்குதா என்று கண்டபடி கிண்டல் செய்யும் விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
#Thalapathy ❤️ #Beast ?@actorvijay @anirudhofficial @hegdepooja @sunpictures @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv @Pallavi_offl @AlwaysJani @Jagadishbliss pic.twitter.com/NfhHx9pY9n
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) April 25, 2022