புகைப்படத்தோடு அரசியலில் தளபதி விஜய்! அதிரடியாக அறிவித்த மக்கள் இயக்கம்..

election vijay thalapathy vijaymakkaliyakkam
By Edward Sep 18, 2021 04:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற புகழையும் பெற்று பல கோடி ரசிகர்களை ஈர்த்து கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் பீஸ்ட் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அரசியலில் தனித்து போட்டியிடன் தளபதி விஜய் ஒப்புதல் அளித்தும் கொடி மற்றும் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தவும் சம்மதம்தெரிவித்துள்ளாராம்.

வெளிபடையாக இதற்கு ஒப்புதல் அளித்தது போல் இல்லாமல், தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் போட்டியிடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி போட்டியிட வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறையாக கூறப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.