பொதுவெளியில் எஸ்.ஏ.சி செய்த செயல்..விஜய் தனது அப்பாவை ஒதுக்க இது தான் காரணமா?
இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் மக்களிடத்தில் கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
ரசிகர்களுக்கு விஜய்யிடம் பிடித்த ஒன்று அவருடைய எளிமை தான். ஆனால் சிலருக்கு விஜய்யிடம் பிடிக்காதது அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை ஒதுக்குவது.
விஜய் தனது தந்தையை ஒதுக்க காரணம் அவர் பொதுவெளிகளில் நடந்து கொள்வது தான் என சில கூறுகின்றனர்.
எஸ்.ஏ.சி - விஜய்
ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இந்த சண்டை உள்ளதாக ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இருப்பினும் அவர் பொதுவெளிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்தால் காலில் விழுந்துவிடுவாராம்.
இந்த செயலை கண்டித்து பல முறை விஜய் தனது தந்தையிடம் சண்டை போட்டுள்ளாராம். இதனால் விஜய் ஆரம்ப கால கட்டத்திலேயே தனது தந்தையை வெறுத்துவிட்டதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது