அந்த நடிகையா? நடிக்கவே கூடாதுன்னு கட்டளை போட்ட விஜய் மனைவி.. விடாமல் கால் செய்து காரியத்தை சாதித்த கனவுக்கன்னி

Vijay Trisha Lokesh Kanagaraj Sangeetha Vijay
By Edward Aug 25, 2022 08:17 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய், லோகேஷ் கனகராஜுடன் தன்னுடைய 67வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கான கதை பணிகளை லோகேஷ் ஆரம்பிப்பதற்காக சமுகவலைத்தளங்களுக்கு பிரேக் விட்டுள்ளார். இந்நிலையில் தளபதி 67 படத்தில் நடிக்கப்போகும் நடிகர்களின் பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக அடிப்பட்டு வருகிறது.

அந்தவகையில் விஜய்க்கு வில்லியாக நடிகை சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் உள்ளிட்ட நடிகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜின் மல்டிவெர்ஷனில் தற்போது கல்யாணமாகாத நடிகை ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளதாம்.

அந்த நடிகையா? நடிக்கவே கூடாதுன்னு கட்டளை போட்ட விஜய் மனைவி.. விடாமல் கால் செய்து காரியத்தை சாதித்த கனவுக்கன்னி | Vijay Help Love Rumour Actress For Thalapathy67

விஜய்யுடன் 14 வருடங்களுக்கு முன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் ஜோடிப்போட்டு நடித்தவர் நடிகை திரிஷா. இப்படத்திற்கு பிறகு விஜய்க்கும் திரிஷாவுக்கு இடையே காதல் கிசுகிசுக்கள் தோன்றி வைரலானது. இது விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு தெரியவர திரிஷாவுடன் நடிக்க வேண்டாம் என்று கட்டளை போட்டுள்ளார்.

இதனால் திரிஷாவை 14 ஆண்டுகளாக ஒதுக்கி வந்துள்ளார் விஜய். இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வரும் நிலையில், விஜய்க்கு கால் செய்து தளபதி 67ல் நடிக்க வாய்ப்பு கொடுக்கும் படி பேசியிருக்கிறார்.

அந்த நடிகையா? நடிக்கவே கூடாதுன்னு கட்டளை போட்ட விஜய் மனைவி.. விடாமல் கால் செய்து காரியத்தை சாதித்த கனவுக்கன்னி | Vijay Help Love Rumour Actress For Thalapathy67

இதுகுறித்து விஜய், லோகேஷ் கனகராஜிடம் பேச அவரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த படம் நமக்கு செட்டாகினால் அடுத்தடுத்த படங்கள் தேடி வரும் என்று விடாமல் பேசியிருக்கிறாராம் நடிகை திரிஷா.

Gallery