திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்!! இந்திய சட்டம் என்ன தண்டனை அளிக்கும்?

Vijay Gossip Today Sangeetha Vijay Madras High Court Actress
By Edward Mar 01, 2026 03:30 AM GMT
Report

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய்

நடிகர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து மனுவை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தற்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

என் கணவர் விஜய், ஒரு நடிகையுடன் 2021ல் முதல் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். இதனை நான் கண்டுபிடித்து, கண்டித்தும் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார். அவருடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அப்போது அவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருகிறார். அது எனக்கு அவமானத்தை தருகிறது, விஜய் தரப்பில் தனக்கு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுத்தால் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையின் பெயரை கூறுவேன் என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளார் சங்கீதா.

திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்!! இந்திய சட்டம் என்ன தண்டனை அளிக்கும்? | Vijay In Extramarital Relationship What Punishment

இந்திய தண்டனைச் சட்டம்

இதன்படி இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 497இன் படி 5 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இச்சட்டப்பிரிவு கடந்த 2018ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதனால் திருமணத்தை மீறிய உறவு தண்டனைக்குரிய குற்றம் இல்லை, திருமண உறவை மீறிய ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தண்டனையும் இல்லை, அபராதமும் இல்லை. பாதிக்கப்படுவதாக நினைப்பவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சங்கீதாவின் குற்றச்சாட்டின்படி, விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டாலும் விஜய்க்கு சிறை தண்டனையோ, அபராதமோ இல்லை.