இயக்குனரால் பெரிய கும்பிடு போட காத்திருக்கும் விஜய்.. வாரிசு டீமால் நிம்மதியை இழந்த தளபதி..

Vijay Vamshi Paidipally Varisu
By Edward Oct 29, 2022 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங்-ஐ வம்சி இழுத்தடித்து வருவது விஜய்யை அதிக கோபத்தினை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

பெரும்பாலும் விஜய், ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்துவிட்டால் பாதி படம் முடிக்கும் நிலையில் பிடிக்கவில்லை என்றால் அதில் கவனம் செலுத்த மாட்டார். அந்த ஒரு நிலை தான் வாரிசு படத்திற்கு வந்திருக்கிறதாம்.

படம் இப்ப முடியும் அப்ப முடியும் என்று இழுத்து வரும் வம்சி மேலும் 18 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளாராம். இந்த படம் எப்படியாவது முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜுடன் 67வது படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் விஜய். இதற்காக லோகேஷ் அயராது உழைத்து வருகிறார்.

இப்படியிருக்கையில் வம்சி தன் இஷ்டத்திற்கு ஷூட்டிங்கை முடிக்க ஆரவம் காட்டாமல் பேட்டி மட்டும் கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே படத்தில் லீக் வீடியோ புகைப்படங்கள் வெளியானதால் விஜய் அப்செட்டில் இருக்கிறார். அதில் இதுவும் ஒன்றாகிவிட்டதே என்று விஜய் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Gallery